உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொங்கராம்பூண்டியில் தீமிதி திருவிழா

கொங்கராம்பூண்டியில் தீமிதி திருவிழா

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.இக்கோவிலில், வசந்தோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் கரகம் எடுத்தல், அர்ஜூனன் தபசுடன் நேற்று மகாபாரதம் நிறைவடைந்தது.இரவு 7:00 மணிக்கு கரகத்துடன் தீ மிதிக்க, தொடர்ந்து கிராம மக்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., சிவா, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர் ஜெயபால், கவுன்சிலர் சாவித்திரி மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை