உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரியில் ஷிப்ட் முறை கோரி திண்டிவனம் மாணவர்கள் போராட்டம்

கல்லுாரியில் ஷிப்ட் முறை கோரி திண்டிவனம் மாணவர்கள் போராட்டம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லுாரியில் ஷிப்ட் முறையை மீண்டும் கொண்டு வரக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது. முதல் ஷிப்ட் காலை 9:00 மணியிலிருந்து பிற்பகல் 1:30 மணி வரையும், பிற்பகல் 1:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் முறை செயல்பட்டது. இந்நிலையில் கல்லுாரியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதால், நேற்று முதல் கல்லுாரியில் ஷிப்ட் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரே வேலையாக காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.மீண்டும் ஷிப்ட் முறையை கொண்டு வர வலியுறுத்தி நேற்று பிற்பகல் 12:20 மணியளவில் கல்லுாரியை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி வரண்டாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லுாரி முதல்வர் நாராயணன் (பொ), ரோஷணை இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 20 நிமிடம் நடந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து கல்லுாரி முதல்வர் போராட்டம் நடத்திய மாணவர்களிடம், ஷிப்ட் முறை வேண்டும் என்று கூறுபவர்கள் தனித்தனியாக கடிதம் கொடுக்கவும் என, கூறினார். மாணவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை