மேலும் செய்திகள்
நாளை மின்தடை
14 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
14 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
14 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
14 hour(s) ago
வானுார் : வானுார் தாலுகாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை பரவலாக அனைத்து கிராமங்களிலும் பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்த முதல்வரின் 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிரான சணப்பை விதைகள் கிளியனுார், வானுார், பரங்கினி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். தொடர்ந்து விவசாயிகள் ஒரே பயிரை சாகுபடி செய்வதால் மண்வளம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைவு ஏற்படுகிறது.எனவே, இதனை நிவர்த்தி செய்ய சணப்பை பசுந்தாள் உர பயிர்களை வயலில் விதைப்பதால், மண்ணில் கரிம அளவை அதிகரித்து, கட்டமைப்பை மேம்படுத்தி அதிக மகசூல் பெற வசதியாகிறது.குறைந்த அளவிலேயே 8,500 கிலோ விதைகள் பெறப்பட்டுள்ளது. முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago