மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா
1 minutes ago
மேலாண் இயக்குநர் ஆய்வு
6 minutes ago
அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
7 minutes ago
தைப்பூச சக்தி மாலை இருமுடி அணிவிக்கும் நிகழ்ச்சி
11 minutes ago
கண்டன ஆர்ப்பாட்டம்
23 hour(s) ago
விழுப்புரம்- 'தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அதிக பணம் எடுத்தால் காரணத்தை விளக்க வேண்டும்' என மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தேர்தல் கண்காணிப்பின்போது, வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதை இந்திய தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்கிறது. அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகளில் இருந்து தினமும் பணம் எடுக்கும் விபரங்கள் டி.ஆர்.ஓ., - ஐ.டி., அதிகாரிகள் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பகிரப்படுகிறது.மாவட்டத்தில் வங்கிகள் மூலம் பகிரப்படும் பணம் எடுத்தல் தொடர்பான தகவல்கள் வருமான வரித்துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. வங்கியால் பகிரப்பட்ட விபரங்கள் மூலம், வருமான வரித்துறை தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சந்தேகத்திற்கிடமாக ரொக்கம் எடுப்பதற்கான ஆதாரம் மற்றும் விண்ணப்பத்தை சரிபார்க்க பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.தேர்தல் நேரத்தில் நிறுவனங்கள், தனி நபர்கள் ஒரே நாளில் வங்கியிலிருந்து வழக்கத்திற்கு மாறாக பணம் எடுத்தால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் அதிக பணம் எடுக்கும் காரணத்தை அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள தேர்தல் பணி அலுவலர்களிடம் விளக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1 minutes ago
6 minutes ago
7 minutes ago
11 minutes ago
23 hour(s) ago