விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் கவுதமசிகாமணிக்கு, தி.மு.க., நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக கவுதமசிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று மாலை 5.00 மணிக்கு சென்னையில் இருந்து விழுப்புரம் வந்ததை யொட்டி, சென்னை பைபாஸ் சாலையில் மாவட்ட தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், துணை செயலாளர்கள் முருகன், இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, வளவனுார் நகர செயலாளர் ஜீவா, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், செல்வக்குமார், வேம்பி ரவி, ஜெயபால், ரவிச்சந்திரன், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி, துணை தலைவர் சித்திக்அலி, நகர நிர்வாகிகள் இளங்கோ, ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, வளவனுார் சேர்மன் மீனாட்சி ஜீவா, மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், அணி நிர்வாகிகள் தினகரன், வினோத், கபாலி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.