உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., எம்.எல்.ஏ., மறைவு பாதியில் முடிந்த வி.சி., பிரசாரம்

தி.மு.க., எம்.எல்.ஏ., மறைவு பாதியில் முடிந்த வி.சி., பிரசாரம்

வானுார் : விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., மறைவையொட்டி, கிளியனுார் பகுதியில் வி.சி., வேட்பாளர் மேற்கொண்ட பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் லோக்சபா தொகுதியில் 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் நேற்று காலை 8;00 மணிக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிளியனுார் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.கிளாப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்து விட்டு, கிளாப்பாக்கம், நாணக்கால்மேடு பகுதிகளில் பிரசாரம் நடந்தது.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜூ, முரளி, மைதிலி மற்றும் வி.சி., கட்சியினர் பங்கேற்றனர்.பிரசாரத்திற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு செய்தியை அறிந்ததும் பிரசாரத்தை முடித்தக் கொண்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனைவரும் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ