உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க.,தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தி.மு.க.,தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நியமனத்திற்கு விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் .தமிழக முதல்வர் ஸ்டாலின் ,கட்சி பொது செயலாளர் துரை முருகன் ஆகியோர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி., டாக்டர் கவுதம சிகாமணியை அறிவித்தனர்.விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் வேம்பி ரவி தலைமையில் நேமூரில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் . சிற்றுராட்சிகள் சங்க செயலாளர் அரசு குமாரி அரிகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் ராஜா,ஒன்றிய துணை செயலாளர் வெற்றி வேல் , பொறியாளர் அணி சுரேஷ், கிளை செயலாளர் ரமேஷ்உட்பட பலர் பங்கேற்றனர்.முண்டியம்பாக்கத்தில் விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், முன்னாள் கவுன்சிலர் அசோக் குமார் ,கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய துணை செயலாளர் ராம் குமார் , கிளை செயலாளர்கள் விஜயவேலன்,வேல்முருகன்,சுதாகர், லேசு முருகன் , லட்சுமிநாராயணன் தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் திவாகர் உட்பட பலர் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை