உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவிக்கு பாலியல் தொந்தரவு விழுப்புரத்தில் டாக்டர் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு விழுப்புரத்தில் டாக்டர் கைது

விழுப்புரம்:விழுப்புரத்தில், சிகிச்சைக்கு வந்த கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கல்லுாரி மாணவி, விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் எம்.ஏ., படித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவமனைக்கு, இடுப்பு வலி பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சென்றார்.மாணவி கடந்த 3 நாட்களாக அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு, விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டர் சந்தோஷ்குமார்,36; சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த டாக்டரை எச்சரித்துவிட்டு வெளியே வந்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்து டாக்டர் சந்தோஷ்குமாரை சராமரியாக தாக்கினர். காயமடைந்த டாக்டர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.மாணவி, கொடுத்த புகாரில், சந்தோஷ்குமார் மீது பாலியல் தொந்தரவு செய்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், விழுப்புரம் மேற்கு போலீசார் டாக்டர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DARMHAR/ D.M.Reddy
மே 06, 2024 01:21

போலீசார் பாரபட்சம் பார்க்காமல் தீர விசாரித்து கைது செய்து நீதி அரசர் முன் நிறுத்தி அவரால்வரால் குறைந்த பட்சம் ஆண்டுகளாவது கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் தான்இவர் போன்ற மற்ற டாக்டர்கள் திருந்த வழியுண்டு


மேலும் செய்திகள்



புதிய வீடியோ