| ADDED : மே 01, 2024 01:57 AM
வானுார், : வானுார் தாலுகாவில் கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்ட வயலை, விழுப்புரம் மாவட்ட நுண்ணீர் பாசன வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா ஆய்வு செய்தார்.வானுார் அடுத்த செங்கமேடு, வி.புதுப்பாக்கம் மற்றும் சேமங்கலம் கிராமங்களில் விவசாயிகள் கரும்பு பயிரில் அதிக மகசூல் பெற சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர்.இதனை விழுப்புரம் மாவட்ட நுண்ணீர் பாசன வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, இந்த சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு பயிரில் நடவு முதல் அறுவடை வரை சாகுபடி செய்ய செலவு மிகவும் குறைவாகவும், அதிக மகசூல் பெறுவதாகவும் வி.புதுப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி இஷ்டலிங்கம் தெரிவித்தார்.கரும்பு தற்சமயம் 6 மாதத்திற்கு மேல் நல்ல நிலையில் உள்ளதால், கரும்புக்கு இட வேண்டிய நீரில் கரையும் உரங்கள் அனைத்தும் சொட்டு நீர் பாசனம் மூலம் அளித்திட அறிவுரை வழங்கப்பட்டது.ஆய்வின் போது, வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, கரும்பு அலுவலர் முல்லைவண்ணன் உடனிருந்தனர்.