உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் டயர் வெடித்து விபத்து டிரைவர் படுகாயம்

கார் டயர் வெடித்து விபத்து டிரைவர் படுகாயம்

மயிலம்: மயிலம் அருகே கார் டயர் வெடித்து சென்டர் மீடியனில் ஏறி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ஹரிஷ், 33; இவர் நேற்று மாலை, விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு கியா காரில் சென்றார். 4:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமம் அருகே வந்தபோது, திடீரென வலது முன் பக்க டயர் வெடித்தது.இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் ஏறி எதிர் திசையில் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த மற்றொரு கியா காரில் மோதி நின்றது.இந்த விபத்தில், டிரைவர் ஹரிஷ் மட்டும் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக எதிர் திசையில் வந்த காரில் வந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஹரிஷ் சீட் பெல்ட் அணியாததால் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலம் போலீசார், காயமடைந்த ஹரிைஷ முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை