உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட காவல் துறையின், சமுக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. சமுக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா, சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், புள்ளியல் துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.மனித உரிமைகள், பாலின சமத்துவம், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள், கல்வியின் முக்கியத்துவம், சாலை பாதுகாப்பு, அரசின் நலத்திட்டங்கள், உதவிகள், சட்ட சார்ந்த விழிப்புணர்வு குறித்தும் விளக்கி பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி