உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்வி வளர்ச்சி நாள் விழா

கல்வி வளர்ச்சி நாள் விழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமையாசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் வைத்தியநாதன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

திருவெண்ணெய்நல்லுார்

திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தனராக விழுப்புரம் காமதேனு அரிமா சங்க தலைவர் தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினார். விழாவில் கவிதை, பேச்சு போட்டி, நாடகம் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்க மண்டல தலைவர் ஜெயராமன், மாவட்ட தலைவர் புருேஷாத்தம்மன், முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ