உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, துணைத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயராமன், திட்ட பொருளாளர் சந்திரசேகர் கோரிக்கைகள் விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். காசில்லா மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் அம்பிகாபதி உட்பட பலர் பங்கேற்றனர். பாண்டுரங்கன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி