| ADDED : ஜூலை 14, 2024 11:13 PM
வானுார்: வானுார் அருகே மின் கம்பியில் சிக்கி இறந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டது.வானுார் அடுத்த புளிச்சப்பள்ளம் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி வீரம்மாள், 50; அதே பகுதியை சேர்ந்தவர் முத்து மனைவி சத்தியவாணி, 60; இருவரும் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தி மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால், இறந்ததாகவும், அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் கண்டமங்கலம் மின்துறை சார்பில், இறந்த இருவரின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன் படி இரு குடும்பத்தினருக்கும், கருணைத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை செயற்பொறியாளர் சிவகுரு, வழங்கினார்.திருச்சிற்றம்பலம் மின்துறை உதவி செயற் பொறியாளர் ஏழுமலை, காட்ராம்பாக்கம் இளமின் பொறியாளர் ஆதிமூலம், காட்ராம்பாக்கம் இளமின் பொறியாளர் சேகரன், புளிச்சப்பள்ளம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.