திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சந்தாராம் காஸ் சர்வீஸ் சார்பில் நேற்று காலை இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமிற்கு, சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஏழுமலை தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுகுமார் வரவேற்றார். தலைவர் சாய்நாத் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர்கள் சங்கரன், சுந்தரம், டாக்டர் சண்முகசுந்தரம், வேல்முருகன், வழக்கறிஞர் கார்த்திக் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் விஜகுமார், ராகவேந்திரா ராமமூர்த்தி, அன்னை சஞ்சீவி வாழ்த்திப் பேசினர்.திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் சந்தானம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.முகாமில் டாக்டர் நிருபமா தலைமையிலான குழுவினர் 400க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர்.முகாமில் முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் வடபழனி, உதயகுமார், சங்க உறுப்பினர்கள் சித்தர்தான், ஐயப்பன், ரவிச்சந்திரன், பாலாஜி, விஜய் சிங், வெங்கடேஷ், குமார், ஆல்பர்ட் ரிச்சர்ட், முரளி கண்ணன், புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.சங்க பொருளாளர் நவநீதன் நன்றி கூறினார்.