உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடும்ப தகராறு மனைவி மாயம்  

குடும்ப தகராறு மனைவி மாயம்  

விழுப்புரம்: திருமணமான மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அடுத்த நரையூர் காலனியைச் சேர்ந்தவர் மைக்கேல் மனைவி சினேகா, 27; இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். மைக்கேல் அடிக்கடி குடித்து விட்டு வருவதை சினேகா தட்டிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து சென்ற சினேகா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை