உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

மயிலம் : மயிலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.மயிலம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 60; விவசாயி. இவர், கூட்டேரிப்பட்டு வார சந்தையில் நேற்று காலை 8:45 மணியளவில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மொபட்டில் கிராமத்திற்கு சென்றார்.பாரத் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள கூட்ரோட்டில் திரும்பும் போது விழுப்புரத்திலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற சைலோ கார், மொபட் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராமசாமி இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை