உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

திருவெண்ணெய் நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; விவசாயி. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் தனது நிலத்தில் மீட்டர் பாக்ஸ் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மீட்டர் பாக்சை மேலே துாக்கியபோது, மின் ஒயரில் உரசியது. இதில், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சுரேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி