மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
6 hour(s) ago
விழுப்புரம் : தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு காரிப் பருவத்தில், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். வாழை பயிர்களுக்கு கண்டமங்கலம், சித்தலம்பட்டு, திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், காணை, அரகண்டநல்லுார், விக்கிரவாண்டி ஆகிய குறு வட்டங்களில் உள்ள விவசாயிகளும், மரவள்ளி பயிர்களுக்கு கண்டமங்கலம், சித்தலம்பட்டு, வானுார், நெமிலி, உப்புவேலுார் ஆகிய குறுவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.வாழை பயிருக்கு பிரீமியம் தொகை ஏக்கருக்கு 822 ரூபாயும், மரவள்ளி பயிருக்கு 607 ரூபாயும் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாகும். மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago