உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு மனைபட்டா கேட்டு உண்ணாவிரதம்

வீட்டு மனைபட்டா கேட்டு உண்ணாவிரதம்

செஞ்சி : மேல்ஒலக்கூர் கிராமத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு பழங்குடியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் ஊராட்சியில் 11 பழங்குடியினர் குடும்பத்தினர் 35 ஆண்டாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு மனைப் பட்டா கேட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை.இதனை கண்டித்தும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரியும் 11 குடும்பத்தினரும் நேற்று ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.செஞ்சி வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 1:00 மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை