உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பறக்கும் படை சோதனை ரூ.82 ஆயிரம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.82 ஆயிரம் பறிமுதல்

செஞ்சி : உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 82 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.செஞ்சி பி.டி.ஓ., சீதாலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை யினர் நேற்று மாலை 4:30 மணி அளவில் மேல் களவாய் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது செஞ்சியில் இருந்து வேலுார் நோக்கிச் சென்ற மினி சரக்கு வேனை சோதனை செய்தனர். அதில் பிஸ்கெட் டின்கள் இருந்தன. வேனில் வந்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணி, 32; என்பவர் வைத்திருந்த பையில் 82 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் மணியிடம் இல்லை.இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, தாசில்தார் ஏழுமலையிடம் ஒப்படைத்தார். அவர், மணியிடம் தகுந்த ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை