உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பறக்கும் படை சோதனை; கலெக்டர் பழனி ஆய்வு

பறக்கும் படை சோதனை; கலெக்டர் பழனி ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு படைகள் நியமித்து கண்காணித்து வருகின்றனர்.குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகள், செஞ்சி, திருவண்ணாமலை சாலை சந்திப்புகளில் பறக்கும் படையினர் முகாமிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பறக்கும் படை கண்காணிப்பை கலெக்டர் பழனி நேற்று இரவு ஆய்வு செய்தார். விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே கொய்யாத்தோப்பு சாலை சந்திப்பில் நடந்த பறக்கும் படை வாகன சோதனையை கலெக்டர் பழனி திடீர் ஆய்வு செய்தார். அப்போது வாகன சோதனை நிலவரம் குறித்து, பறக்கும் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ