உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா 

முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா 

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.முக., சார்பில் தி.முக., முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா செஞ்சி மற்றும் அப்பம்பட்டில் நடந்தது.செஞ்சியில் பேரூராட்சி சேர்மன் மொக்தியார், அப்பம்பட்டு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினர்.அமைச்சர் மஸ்தான், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கோட்டீஸ்வரன், நகர செயலாளர் கார்த்திக், தொண்டரணி பாஷா, ரவி, கவுன்சிலர்கள் சிவக்குமார், மோகன், முன்னாள் கவுன்சிலர் சீனுவாசன், ஒன்றிய கவுன்சிலர் மணி, மாவட்ட நிர்வாகிகள் பிரசன்னா, தாஸ், வழக்கறிஞர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை