உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கழிக்குப்பம் கிராமம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளயில், இலவச பொது நல மருத்துவ முகாம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.எஸ்.எஸ்.ஏ., அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமிற்கு, மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். தொடர்ந்து பொதுத் தேர்வில் சாதனை படைத்த கழிக்குப்பம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை