இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் உலக இயன்முறை தினத்தையொட்டி இலவச பிசியோதெரபி மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம், லடசுமி ஏஜன்சீஸ், அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த முகாமிற்கு, விழுப்புரம் லயன்ஸ் சங்கத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். ராஜகணபதி, பக்தவச்சலம், சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லுாரி துணை பொது மேலாளர் புகழேந்தி, கல்லுாரி முதல்வர் ஆனந்த்பாபு, பிசியோதெரபி சிறப்பு மருத்துவர் பரணிதரன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், பொது மக்களுக்கு, சிகிச்சையளித்தனர்.முகாமில், பொது மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பியல் மருத்துவம், பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.