உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூடிகிடக்கும் ஆரோவில் புறக்காவல் நிலையம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தல் ஜோர்

மூடிகிடக்கும் ஆரோவில் புறக்காவல் நிலையம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தல் ஜோர்

வானுார்: குயிலாப்பாளையம்-இடையஞ்சாவடி சாலையில் அமைக்கப்பட்ட ஆரோவில் புறக்காவல் நிலையம், மூடி கிடப்பதால், கஞ்சா, மதுபாட்டில்கள் தங்கு தடையின்றி கடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதை தடுக்கும் பொருட்டு குயிலாப்பாளையம்-இடையஞ்சாவடி சாலையின் இடைப்பட்ட பகுதியில் (சின்ன கோட்டக்குப்பம் செல்லும் சாலை சந்திப்பு) கண்காணிப்பு கேமிரா மற்றும் உயர் கோபுர மின் விளக்கு வசதிகளுடன் புதிதாக ஆரோவில் புறக்காவல் நிலையம் கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டது.அதன் பிறகு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளும், அவ்வழியாக வருவதற்கு அச்சமடைந்தனர். மேலும், வழிபறி, திருட்டு சம்பவங்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது, போலீஸ் பற்றாக்குறை காரணமாக அந்த புறக்காவல் நிலையம் மூடியே கிடக்கிறது.வாரத்திற்கு அல்லது மாதத்ததிற்கு ஒரு முறை மட்டுமே திறக்கும் போலீசார், அந்த நேரத்தில் மட்டுமே அவ்வழியாக செல்லும் வாகனங்களை ஆய்வு செய்கின்றனர். மூடிக்கிடக்கும் இந்த புறக்காவல் நிலையத்தால், அச்சமின்றி, கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆரோவில் போலீஸ் அதிகாரிகளுக்கும், பொது மக்கள் புகார் தெரிவித்தும் , புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகளும், கஞ்சா விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் படி, 'வாக்கி டாக்கி' மூலம் அறிவுறுத்துகின்றனர். ஆனால் புறக்காவல் நிலையம் வழியாக ஏராளமானோர் அச்சமின்றி கஞ்சா, மதுபாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். இதை ஆரோவில் போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ