உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் கவுதமசிகாமணி எம்.பி., ஓட்டு சேகரிப்பு

விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் கவுதமசிகாமணி எம்.பி., ஓட்டு சேகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி இந்தியா கூட்டணி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கவுதமசிகாமணி எம்.பி., விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்தார்.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி, டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி., விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கஸ்பாகாரணை, தும்பூர், உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வி.சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, வி.சாலை, கொங்கராம்பூண்டி, சின்னதச்சூர் கிராமங்களில் உள்ள பொதுமக்களை, டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி., நேரில் சந்தித்து, தமிழக அரசின் சாதனைகளை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், தி.மு.க., பொருளாளர் ஜனகராஜ், விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை