| ADDED : ஆக 07, 2024 05:53 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கிரிஜா தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சேகர், கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! என்ற அரசு திட்டத்தின் கீழ், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பின் அவர் பெண் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் பற்றியும், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை கடத்தல் பற்றியும் தற்காப்பு பயிற்சி உள்ளிட்டவை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் காணொலி மூலம் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பெண் குழந்தைகளுக்கான இலவச உதவி மைய தொடர்பு எண்களான, குழந்தைகளுக்கான உதவி மையம்- 1098, பெண்களுக்கான உதவி மையம்- 181, முதியோர்கள் உதவி மையம்- 14567, ஆண், பெண் மாணவர்களுக்கான உதவி மையம்-14417, சைபர் கிரைம் குற்றம் சம்பந்தப்பட்ட உதவி எண்.1930 ஆகிய இலவச சேவை மையத்தை விளக்கி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் கலைசெல்வி, ராஜேந்திரன், புனிதவள்ளி மற்றும் காவல் துறையினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.