| ADDED : ஜூலை 04, 2024 12:31 AM
வானுார்: வானுாரில் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் ஏரிக்கரையோரம் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் பூசாரி ஜெயகோபி, 54; கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் உள்ள மரக்கதவு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தாலிச் செயின், ஒரு குத்து விளக்கு திருடு போயிருப்பது தெரியவந்தது.மேலும், கோவில் உள்ளே வருவதற்கு முன் மர்ம நபர்கள், கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் முகம் பதிவாமல் இருப்பதற்கு, கேமராவில் சேற்றை பூசி விட்டு, ஹார்டு டிஸ்க்கை திருடிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.இது குறித்து ஜெயகோபி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.