உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் சாதனை இடஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் சாதனை இடஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தேசிய மாநில அளவிலான விளையாட்டில் வென்று பதக்கங்களால் இடஒதுக்கீடு பெற்று உயர் கல்வி மற்றும் அரசு பணியிலுள்ள கிராமபுற அரசு பள்ளி மாணவர்கள்.விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியம் , கெடார் அருகே உள்ள அத்தியூர் திருக்கை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் சரவணன். மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க, இவரது விடாத முயற்சியால் தினமும் காலை மாலை இருவேளை தொடர்பயிற்சியும், மனதை ஒரு முக படுத்த யோகா பயிற்சியின் காரணமாகவும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய, மாநில அளவில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.எஸ்.ஜி.எப்.ஐ., இந்திய பள்ளிக்குழுமம் சார்பில் தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த கோ-கோ போட்டியில் மாணவிகள் எழிலரசி,அம்சவள்ளி ஆகியோர் தமிழக அணி சார்பில் பங்கேற்றனர்.மாநில அளவிலான கோ-கோ தடகள போட்டியில் 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவிகள் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர் .கடந்த2012-13ம் ஆண்டுமுதல் 2024-25 ம் ஆண்டுவரை இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர் . தமிழக அரசால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் பங்கேற்று மாவட்டத்தில் முதல் பரிசை பெற்றுள்ளனர். இப்பள்ளியில் படித்த 20க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு பெற்று பொறியியல்,கலைக்கல்லுாரியில் மேற்படிப்பு படித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு சீருடை பணியில் மாணவ, மாணவிகள் இடஒதுக்கீட்டின் மூலம் பணி ஆணை பெற்று பணி செய்து வருகின்றனர்.இப்பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவி வசந்தி விருதுநகரில் உள்ள விளையாட்டு பயிற்சி பள்ளியில் தடகள பயிற்சி பெற்று வருவது குறிப்பிட தக்கது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர், தமிழாசிரியர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர், பிடிஏ தலைவர், பள்ளிமேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், முன்னாள்மாணவர்கள்விளையாட்டிற்கு பெரிதும் உதவிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை