உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிந்தசாமி நகரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கோவிந்தசாமி நகரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

விழுப்புரம், : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின் பகுதி கோவிந்தசாமி நகரில் கழிவுநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின் பகுதியில் உள்ள கோவிந்தசாமி நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரின் பிரதான மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்தோடி சாலையோரம் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி குடிநீர் டேங்க் போர்வெல் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதோடு, பன்றிகளும் அங்கு திரிந்து வருவதால், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் கழிவு நீர் தேக்கத்தை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ