உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாட்டியை அடித்து கொன்ற பேரன்கள், மருமகள் கைது; திருவெண்ணெய்நல்லுார் அருகே பயங்கரம்

பாட்டியை அடித்து கொன்ற பேரன்கள், மருமகள் கைது; திருவெண்ணெய்நல்லுார் அருகே பயங்கரம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே இடத்தகராறில் பாட்டியை அடித்து கொன்ற பேரன்கள் உட்பட போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பெரிய செவலை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தாமோதரன், சுந்தரம் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். தாமோதரன் மனைவி நரசம்மாள்,62; மகன் ஆறுமுகம்.45. சுந்தரம் மகன் குமரவேல். இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டிற்கு மத்தியில் மதில் சுவர் கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். படுகாயமடைந்த நரசம்மாள், குமரவேலுவை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர் பரிசோதித்து, நரசம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். குமரவேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த திருவெண்ணெய் நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் குமரவேல், அவரது மகன்கள் மோகன், 19; கண்ணன், 20; குமரவேல் மனைவி மாலதி, 36, தாய் மாணிக்கம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், மோகன், கண்ணன், மாலதி, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை