உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேலை வாய்ப்பு திட்டங்களில் மானிய கடனுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலை வாய்ப்பு திட்டங்களில் மானிய கடனுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் : பிரதமரின் வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் மானிய கடனுதவி பெற ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டங்கள் மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது.பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசின் 40 சதவீதம் மற்றும் மத்திய அரசின் 60 சதவீதம் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்திற்கான முழு நிதியை மத்திய அரசு வழங்குகிறது.சுயதொழில் துவங்க ஆர்வமுள்ளோர், இந்த திட்டங்களின் கீழ் உங்களின் ஆர்வம், தகுதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில்களை துவங்க மானியத்தோடு கடன் பெறலாம்.இந்த திட்டங்கள் குறித்த தகவல்கள், திட்ட அறிக்கை தயாரிக்கும் முறை, இணையவழி விண்ணப்பித்தல், வங்கியை அணுகுதல், தொழில் துவங்கி நடத்துதல் ஆகிய அனைத்து வழிகாட்டுதல்களையும், மாவட்ட தொழில் மையம் மூலம் பெறலாம்.இந்த திட்டங்களின் கீழ் மானிய கடனுதவி பெற ஆர்வமுள்ளோர், வழிகாட்டுதல்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்பவரை நேரடியாகவோ, தொலைபேசி 04146 223616, மொபைல் 9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ