உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா பதுக்கிய வாலிபர் கைது

குட்கா பதுக்கிய வாலிபர் கைது

மரக்காணம் : மரக்காணம் அடுத்த பிரம்மதேசத்தில் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் நேற்று காலை 10:00 மணியளவில் பிரம்மதேசத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அப்பகுதியில் கலிபுல்லா மகன் முகமது ஷாகுல்அமீது, 39; என்பவர் வீட்டின் பின்புற தோட்டத்தில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 915 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஷாகுல்அமீதை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை