உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம், - விழுப்புரத்தில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு சாலையோரம் உள்ள அலமேலுபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம், 62; என்பவரது பெட்டிக் கடையை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்