உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளுக்கு போனில் தொல்லை; தட்டிகேட்ட தந்தை மீது தாக்குதல்

மகளுக்கு போனில் தொல்லை; தட்டிகேட்ட தந்தை மீது தாக்குதல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மகளிடம் மொபைல் பேசியதை தட்டிகேட்ட தந்தையை, தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு பொன்னங்குப்பத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன், 44; இவரது மகளுக்கு, மொபைல் போனில் பேசி தொல்லை கொடுத்ததாக, கடந்த 4ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன் ராஜிவிடம், 23; சென்று, தட்டி கேட்டுள்ளார்.இதனால் கோப மடைந்த ராஜி மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர், அருள்செல்வனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ராஜி காயமடைந்தார்.இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அருள்செல்வன் மற்றும் ராஜி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை