உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹெலிகாப்டர் தரை இறக்கம் உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

ஹெலிகாப்டர் தரை இறக்கம் உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே விமானப்படை ஓடுதள பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் இரண்டாம் உடகப் போரின்போது விமானப்படைக்காக ஓடுதள பாதை அமைக்கப்பட்டது. போர் முடிந்த பிறகு எவ்வித பயன்பாடும் இல்லாததால், விமான ஓடுதள பாதையை சிலர் ஆக்கிரமித்து வந்தனர்.இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள விமானப்படை வீரர்கள் கடந்த சில தினங்களாக இங்குள்ள விமான ஓடுதள பாதையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அனுமதிப்பதில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர், இந்த விமான ஓடுதள பாதையில் இறங்கியது. அதனை அறிந்த சுற்று வட்டார மக்கள், ராணுவ ஹெலிகாப்பரை பார்க்க கூடினர். அவர்களை விமான ஓடுதள பாதையில் அனுமதிக்காததால், வெகு தொலைவில் இருந்து ஹெலிகாப்டரை பார்த்து சென்றனர். சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்