உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

கண்டாச்சிபுரம், : வடகரை தாழனுார் ஊராட்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தி.மு.க சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.வடகரை தாழனுாரைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. சிவகாமி குடும்பத்தினருக்கு முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிவாரண உதவி மற்றும் அத்தியாவசியப் பெருட்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் மூர்த்தி, ஒன்றிய சேர்மேன் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் முருகையன், முகையூர் ஊராட்சி தலைவர் லுாயிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்