| ADDED : மே 09, 2024 09:37 PM
விழுப்புரம்: உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்ததவிழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து வரும் 11ம் தேதி நடைபெற உள்ள 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கல்வியாளர்கள், அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் வரும் 11ம் தேதி 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளதால், கிராமப்புற மாணவர்கள் தங்களுக்கான உயர்கல்வியை தேர்வு செய்ய இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்விக்கடன், உயர்கல்விக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவிதொகைகள், உயர்கல்வி குறித்த வழிகாட்டி கையேடுகள், இடஒதுக்கீடு பற்றி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், சி.இ.ஓ., அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.