உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிப்பு

சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிப்பு

வானுார்: புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கிளியனுார் அடுத்த புதுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை, அப்பள்ளியின் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் கவுரவித்து வருகின்றனர்.முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், கடந்த 2023-24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 சிறப்பிடங்களைப் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவில், முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, முதல் 3 சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் வழங்கியும், சால்வை அணிவித்தும் கவுரவித்தனர்.பள்ளி தலைமையாசிரியர் திருமாவளன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பொற்செல்வி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை