வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 50; அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர்.அதனால், சதீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைந்து கிடந்தது.வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஏழரை சவரன் நகைகள் திருடு போயிருந்தது.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.