உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 34; இவரது மனைவி அனிதா, 30; இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். ஏழுமலைக்கும், அனிதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை 4:30 மணியளவில் இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏழுமலை மனைவி அனிதாவைத் தாக்கினார்.காயமடைந்த அனிதா விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அனிதா அளித்தபுகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ