உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியுடன் தகராறு கணவன் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவன் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குடும்ப பிரச்னையால் கணவன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் மகாலட்சுமி நகரை சேர்ந்த சுதாகர் மகன் சங்கர்கணேஷ்,19; பெயிண்டர். இவருக்கும், கோமளவள்ளி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 3 மாத குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக, கோமளவள்ளி குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மடுகரையில் உள்ள தனியார் லெதர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனால், கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த சங்கர்கணேஷ், நேற்று முன்தினம் வீட்டில் ஆளில்லாத நேரத்தில், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சங்கர்கணேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, வாட்ஸ் அப்பில் சோகத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி