உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஐ.ஜே.கே., ஆலோசனைக் கூட்டம்

ஐ.ஜே.கே., ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், ஐ.ஜே.கே., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கி பேசினார். முத்துக்குமரன் என்கிற ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், செயலாளர் ஜான்ராஜ், நகர தலைவர் ராகுல், செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். அ.ம.மு.க., நகர செயலாளர் சக்திவேல் முருகன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட இளைஞரணி அமைப்பு செயலாளர் பகவதி சுரேந்தர், மாவட்ட இளவேந்தர் பேரவைத் தலைவர் வேணுகோபால், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராகுல், மாணவர் அணி தலைவர் சவுந்தர்ராஜன், தொண்டர் படை தலைவர் டேனி ஜான், இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெயராஜ், இளைஞர் பேரவைச் செயலாளர் மணிவர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை