| ADDED : ஜூலை 14, 2024 05:22 AM
வானுார், : டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், விந்தை விழுதுகள் என்ற முன்மாதிரி செயல் திட்ட துவக்க விழா நடந்தது.மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்கள் தங்களின் வாழ்நிலை பகுதிகளில் உள்ள புவிசார் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் விந்தை விழுதுகள் என்ற முன்மாதிரி செயல் திட்டம் துவக்க விழா நடந்தது.விழாவில், ஆரோவில், பிச்சாண்டி குளம் சுற்றுச்சூழல் நிறுவனமும் இணைந்தும் ஓராண்டு செயல்திட்டமாக முன்னெடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களே முன்னெடுக்கின்ற பள்ளி சார் சுற்றுச்சூழல் தணிக்கை, தண்ணீர் சிக்கனம், மின் சிக்கனம் மற்றும் பயன்பாடு கழிவு மேலாண்மை, மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளில், மாணவர்கள் தன் விருப்பத்துடன் செயலாற்றி சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவங்களை பெற்று, செயலாற்றிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.அதன் ஒரு நிகழ்வாக தொல்லியல் சார் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் புதை படிமங்கள் குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சிக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெய் சாந்தி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, ரேவதி, ஜெகஷீஜா, விஜயகுமார் பங்கேற்றனர். இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர் ஹேமலதா நன்றி கூறினார்.