உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

விழுப்புரம், : விழுப்புரத்தில், ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். துணை ஆளுநர் கந்தன் முன்னிலை வகித்தார். ஹரி தங்க நகைக் கடை உரிமையாளர் துரைராஜ் தலைவராகவும், பிஸ்கோல்டு தண்ணீர் நிறுவன உரிமையாளர் வினோத் செயலாளராகவும், நன்னாடு ஸ்ரீராம் மரவாடி உரிமையாளர் சிவக்குமார் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், நடப்பு தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். முன்னாள் துணை ஆளுநர் புதுராஜா ஒருங்கிணைத்தார்.விழாவில், மாணவர்களுக்கு அரிசி சிப்பம், கல்வி உதவித் தொகை போன்ற நல திட்ட உதவி வழங்கப்பட்டது. செயலாளர் வினோத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ