உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆளும் கட்சியை விமர்சித்து சுயேச்சை வேட்பாளர் போஸ்டர்

ஆளும் கட்சியை விமர்சித்து சுயேச்சை வேட்பாளர் போஸ்டர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., சிவா, பா.ம.க., அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, 29 பேர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களிடையே சுயேச்சை வேட்பாளர்களும் ஓட்டு கேட்டு வருகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா ஸ்டாலின், வைரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு ஆதரவாக விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.வன்னியர் கல்வி இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், மூன்று தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம் போடும் தி.மு.க., என்றும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியின் கார்டூன் படங்களை போட்டு விமர்சித்துள்ளதோடு, வன்னியர் இட ஒதுக்கீடை வென்றிட விக்கிரவாண்டியில் போட்டியிடும் ராஜா ஸ்டாலினுக்கு ஆதரவளிக்கும்படி குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர், ஆளும் கட்சியை விமர்சித்து வரும் நிலையில், சுயேச்சைகளும் விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 06, 2024 13:38

இது ஜனநாயக நாடு ...... அரசியலில் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை .....


shyamnats
ஜூலை 06, 2024 09:04

அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளின் படி இந்தியர் அனைவரும் சமம் , எனும்போது, சாதி , மதம் அடிப்படையில் அதிகப்படி சலுகைகளை எவ்வளவு காலம்தான் அரசு வழங்கிக்கொண்டே இருக்கும். நலிந்த பொருளாதார, உடல் ஊனம் , மற்றும் தனி மனித சாதனைகளின் அடிப்படையில் கூட சலுகைகளை வழங்குவதை ஏற்றுக்கொள்ளலாம். அரசு ஒதுக்கீடு கொள்கைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் . அனைவருக்குமான Uniform civil code சட்டங்களும் இயற்ற பட வேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை