உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க தீவிரம்

விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க தீவிரம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி புதிய டி.எஸ்.பி.,அலுவலகம் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு மற்றும் செஞ்சி டி.எஸ்.பி., அலுவலகத்திலிருந்து கெடார், கஞ்சனுார் ஆகிய 7 போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கி விக்கிரவாண்டி டி.எஸ்.பி., அலுவலகம் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.கடந்த மாதம் புதிய டி.எஸ்.பி., யை நியமித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து விக்கிரவாண்டியில் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க இடம் தற்காலிகமாக வெங்கடேஸ்வரா நகரில் மெயின்ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தினை வாடகைக்கு பேசி அலுவலகம் திறப்பதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வார இறுதிக்குள் புதிய அலுவலகம் திறந்து டி.எஸ்.பி., அலுவலகம் செயல்படும் என போலீஸ் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை