உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவக் கல்லுாரியில்  பக்கவாத சிகிச்சை பயிற்சி

அரசு மருத்துவக் கல்லுாரியில்  பக்கவாத சிகிச்சை பயிற்சி

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பக்கவாதம் நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு, கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தார். நோய் தடுப்பு சிகிச்சைகள் குறித்து நரம்பியல் துறை தலைவர் டாக்டர் பிரபாகரன், பொது மருத்துவர் டாக்டர் மேஜர் சிவக்குமார் ஆகியோர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையிலிருந்துவந்த டாக்டர்கள், ரேடியோலாஜிஸ்ட், சிடி டெக்னீஷியன், செவிலியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்தனர்.துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் தரனேந்திரன்,ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்துறை டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை