உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுயதொழில் பயிற்சிக்கு 29ம் தேதி நேர்முக தேர்வு

சுயதொழில் பயிற்சிக்கு 29ம் தேதி நேர்முக தேர்வு

விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் துவங்க உள்ள சுயதொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் செய்திக் குறிப்பு:விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சணல் தாம்பூல பை மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி 13 நாட்கள் நடைபெற உள்ளது. அதே போல், அழகு நகைகள் தயாரிக்கும் பயிற்சி 13 நாட்களும், பேப்பர் பேக் தயாரித்தல் 10 நாட்களும் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்குகிறது. பயிற்சிக்கான நேர்முக தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க, 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்திருப்ப தோடு, தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ நுாறு நாள் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.கிராமப்புறத்தைச் சேர்ந் தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுயதொழில் செய்ய விரும்பும் அனைவரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை